பிரதமர் ஆவதற்கு சரியான நபர்… ராகுல்தான்… வீரப்ப மொய்லி சொல்றார்

ஐதராபாத்:
இவர்தான்… இவர்தான்… பிரதமர் ஆவதற்கு சரியான நபர் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை தெரிவித்துள்ளார் வீரப்ப மொய்லி.

நாட்டின் அடுத்த பிரதமராவதற்கு சிறப்பான நபர் காங்., தலைவர் ராகுல் தான் என அக்கட்சி மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். தேசிய அளவில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளை இழந்து வருகிறது.

பிரதமர் பதவிக்கு ராகுலுக்கு மாற்று என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பிரதமராவதற்கு சரியான, சிறப்பான நபர் ராகுல் மட்டுமே. தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்., தான் வெற்றி பெறும். இந்த வெற்றி எங்கள் கட்சி தலைவரான ராகுலுக்கு கூடுதல் மதிப்பையும், பலத்தையும் பெற்று தரும்.

யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக பா.ஜ., விற்கு எதிரான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் மோடி மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக ஒன்றுபட்டு வருகின்றனர். மோடி மற்றும் பா.ஜ.,வை எதிர்ப்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!