பிரதமர் மீதான வழக்குப்பதிவு மனு… அடுத்த வாரம் விசாரிக்க கோர்ட் ஒப்புதல்

புதுடில்லி:
அடுத்த வாரம்… அடுத்த வாரம்… விசாரிக்கிறோம்… என்று சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது. எதற்கு தெரியுங்களா?

ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், இது தொடர்பாக பிரதமர் மோடி, பாரீக்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் தொடர்ந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டது.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் எம்எல் சர்மா என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அரசியல் சட்டப்படி, பார்லிமென்டில் ஒப்புதல் பெறவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரீக்கர், தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனம் மீது வழக்கு தொடர்வதுடன், பணத்தை திரும்ப பெற வேண்டும்.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது. இதேபோன்றொரு வழக்கை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெஹ்சீன் பூனவாலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!