பிரதமர் – முதல்வர் அட்டகாச சிரிப்பின் பின்னணி என்ன?

புதுடில்லி:
என்ன அர்த்தம்… இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்… பின்னணியில் கூட்டணி முடிவாகிவிட்டதா என்ற கேள்விதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாகி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மோடி பலமுறை சந்தித்துள்ளனர். ஆனால் இந்த புகைப்படத்தில் இருவரும் பிரகாசமான சிரிப்புடன் காட்சி அளிக்கின்றனர். இந்த முகமலர்ச்சி என்பது வழக்கத்திற்கு மாறாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

வழக்கமாக பிரதமர் மோடி இறுக்கமான முகத்துடன் தலைவர்களை சந்தித்து உள்ள படங்கள்தான் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த புகைப்படம் முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டது. இருவரின் இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம் பற்றி தெரிய வந்துள்ளதாவது:

வரும் லோக்சபா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஒப்புக்கொண்டதோ? என்ற சந்தேகம்தான் அது. முதல்வரிடம், பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுப்பிய போது, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தேர்தல் வரும்போது அது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். எனவே இந்த சிரிப்பிற்கு பின்னணியில் கூட்டணி குறித்த மர்மம் உள்ளது என்கின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!