பிரபஞ்ச அழகி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா க்ரே

2018ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா க்ரே வென்றுள்ளார். பிரபஞ்ச அழகி போட்டி வரலாற்றில் முதன்முறையாக நடுவர் குழுவில் பெண்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக் நேற்று இரவு அழகின் தலைநகரமாகவே மாறி போயிருந்தது.

நடப்பாண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்வதற்காக உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான அழகிகள் பாங்காக்கில் குவிந்து இருந்தன.

வண்ணமயமான அழகு திருவிழா என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரபஞ்ச அழகி போட்டியில் 93 நாடுகளைச் சேர்ந்த மாடல் அழகிகள் கலந்து கொண்டன.

வெவ்வேறு விதமான ஆடைகள் அணிந்து வந்த பன்னாட்டு அழகிகள் ஒய்யார நடையில் அனைவரையும் அசத்தினர்.

இதில் போட்டியிட்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி angela ponce-க்கு நடுவர்கள் பார்வையாளர்கள் என அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்து மழை பொழிந்தது. ஆணாக பிறந்து பெண்ணாக மாறி பிரபஞ்ச அழகி போட்டியில் முதன்முறையாக போட்டியிடும் மாடல் என்ற பெருமையால் ஏஞ்சலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

67வது பிரபஞ்ச அழகி போட்டியின் மையக்கருவாக முன்னேற்றம் அடைந்த பெண்கள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. முதன்முதலாக தொழில் அதிபர்கள், முன்னாள் பிரபஞ்ச அழகிகள் என 7 பெண்கள் மட்டுமே கொண்ட நடுவர் குழு உருவாக்கப்பட்டிருந்தது.இந்தியா சார்பில் போட்டியிட்ட Nehal Chudasama முதல் 20 இடங்களில் கூட இடம் பெறாமல் ஏமாற்றம் அளித்தார்.

மீ டூ இயக்கம் தவறாக பயன்படுத்தப்படுகிறாதா , ஊடக சுதந்திரம் ஏன் முக்கியம் உள்ளிட்ட பல கேள்விகள் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டன.

இதனிடையே கடைசி சுற்றில் வெனிசுலாவைச் சேர்ந்த Sthefany Guterrez  3ம் இடத்தை பிடித்தார். பிரபஞ்ச அழகி யார் என்ற படபடப்பு அரங்கத்தையே தொற்றியிருக்க பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயதான கேட்ரியோனா க்ரே பட்டத்தைத் தட்டி சென்றார். தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த Tamaryn Green இரண்டாம் இடத்தை பிடித்தார்.

வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் என்ன? பிரபஞ்ச அழகியாக தேர்வானால் அதை எவ்வாறு செயல்படுத்துவீர்கள் என்ற கேள்வி கேட்ரியோனாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு கேட்ரியோனா மணிலாவில் உள்ள குடிசை பகுதிகளில் தான் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அந்த இடத்தின் அழகினைகண்டறிய தன் மனதினை பழக்கப்படுத்தி இருப்பதாகவும், பிரபஞ்ச அழகியானால் தான் கற்று கொண்ட இந்த விஷயத்தை செயல்படுத்தி அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்வேன் என்றும் பதில் அளித்தார்.

Sharing is caring!