பிரபல செல்வந்தர் ராஜ் ராஜரட்ணம் விடுதலை

பிரபல செல்வந்தரான ராஜ் ராஜரட்ணம் 8 வருட சிறைத்தண்டனையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க உள்ளக  தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று, அமெரிக்க பங்குச்சந்தைக்கு வழங்கியதற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த  ராஜ் ராஜரட்ணம்  தண்டனைக்காலம் நிறைவுறுவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

60-இற்கு மேற்பட்ட வயதுடைய கைதிகள் அல்லது பாரிய நோய்ப் பாதிப்பிற்குள்ளானவர்கள் தமது இறுதி சிறையிருப்பை வீட்டில் கழிக்க முடியும் என்ற சட்டத்தின் பிரகாரம் 62 வயதுடைய ராஜரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கலோன் குழுமம் LLC-யின் 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்தை நிர்வகித்த ராஜரட்ணம் சிறைவாசத்தின் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே அனுபவிப்பார் என அமெரிக்க சிறைச்சாலைகள்  திணைக்களம்   தெரிவித்துள்ளது.

ராஜ் ராஜரட்ணம் உள்நாட்டுத் தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வழங்கியமை தொடர்பிலான வழக்கின் முக்கிய  சூத்திரதாரியாவார்.

ராஜ் ரட்ணத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை உள்ளக பங்கு வரலாற்றில் வழங்கப்பட்ட நீண்ட கால தண்டனையாகும்.

Sharing is caring!