பிரமோஸ்க்கு இணையான ஏவுகணை பாக்.,க்கு விற்க சீனா முடிவு
பீஜிங்:
போட்டியில் இறங்கி பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய உள்ளது சீனா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது.
பக்கத்து நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல் முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S