பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்தது… 24 பேர் மாயம்

கவுகாத்தி:
பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 11 பேர் மீட்கப்பட்டனர். 24 பேரை காணாததால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் 36 பேருடன் சென்ற படகு, பிரம்மபுத்ரா நதியில் கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடந்த தேடுதலில், 24 பேரை காணவில்லை.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!