பிரான்சன் சுற்றுலா தளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து உயிரிழப்பு

அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் பிரான்சன் சுற்றுலா தளம் மிகவும் பிரபலமானது. இங்குள்ள ஏரியில் தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய டக் படகு சவாரி செல்ல கூட்ட அலைமோதும்.

இந்நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுடன் பயணம் மேற்கொண்ட டக் படகு ஒன்று அதிக காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்தது. இதில் நீரல் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டதில் 2 பேர் நிலை மிக மோசமாக உள்ளது. டக் படகு சவாரியில் ஏற்கனவே 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

Sharing is caring!