பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு
பிரான்ஸின் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகியுள்ளனர்.
ஸ்டிராஸ்போர்க் நகரில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச்சந்தை அமைக்கப்பட்டிருந்தது. சனநெருக்கடி மிகுந்த அந்த சாலையில் நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து தாறுமாறாகச் சுட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்புத் தேடி தப்பித்து ஓடினர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.
இதன்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், காயமடைந்த அந்நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவத்தினை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S