பிரான்ஸில் தாக்குதல் அச்சுறுத்தல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸின் மேற்குப் பகுதியின் அன்கெர்ஸ் நகரிலுள்ள பெற்றோல் நிலையம் ஒன்றில், மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்த நபர் ஒருவர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்ததாக, உள்துறை அமைச்சர் கிறிஸ்தோபே கஸ்டனேர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல் விடுத்த நபர் வெடிமருந்துகளை தம்வசம் வைத்திருந்ததுடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சம்பவத்தின் பின்னர் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Sharing is caring!