பிரான்ஸ்சில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள்

பாரிஸ்:
அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இது பிரான்சில்தான்.

பெட்ரோல் மீதான வரி உயர்வைக் கண்டித்து, ஐரோப்பிய நாடான பிரான்சில் நடந்து வந்த போராட்டம், தற்போது அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. அவர் பதவி விலக வலியுறுத்தி, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஐரோப்பிய நாடான பிரான்சில் பெட்ரோல் மீதான வரியை உயர்த்துவது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, நவ., 17ல் போராட்டம் துவங்கியது. அங்கு வாகனங்களில், அவசர காலத்தில் அணியும், மஞ்சள் நிற ஆடையை அணிந்து, இந்த போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர்.

போராட்டங்களைத் தொடர்ந்து வரி விதிப்பை நிறுத்தி வைப்பது உட்பட அறிவிப்புகளை, அதிபர் இமானுவேல் மேக்ரான் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், போராட்டம் தணியவில்லை.

அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விலக வேண்டும் என வலியுறுத்தி, பாரிஸ் உள்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது. பல்வேறு இடங்களில் நேற்று நடந்த போராட்டங்களில், 31 ஆயிரம் பேர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!