பிரான்ஸ் நாட்டில் பாதிரியார் தேவாலயத்திற்குள்ளேயே தற்கொலை

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டடு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த பாதிரியார் தேவாலயத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ரோயன் நகரில் கிறிஸ்தவ தேவாயலம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பாதிரியாக 38 வயதான ஜீன் பாப்டிக் செபே உள்ளார்.

இந்த தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வந்த இளம்பெண் ஒருவருக்கு பாதிரியார் பாப்டிக் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் ர்ச் பி‌ஷப்பிடம் புகார் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறையும் வழக்கு பதிவு செய்தது விசாரணை மேற்கொண்டது. அப்போது, இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்தற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பாதிரியார் செபே ரோயன் நகரில் உள்ள 23-வது புனித ஜீன் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!