பிரான்ஸ் நாட்டில் மக்கள் போராடி வருகின்றனர்

பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கான வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் மக்கள் போராடி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2017 முதல் அதிபராக உள்ளவர் இமானுவல் மாக்ரோன். சமீபத்தில் பிரான்சில் எரிபொருளுக்கான வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை ஒட்டி நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரான்சில் உள்ள கார்களை செலுத்துவோர் அனைவரும் மஞ்சள் கோட் ஒன்றை அணிந்து வாகனங்களை செலுத்தி வருகின்றனர். இந்த மஞ்சள் கோட்டை ஒரு சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் வைத்திருந்து காவல்துறையினரை கண்டதும் உடனடியாக போட்டுக் கொள்கின்றனர். இதனால் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது மிகவும் கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சுமார் 5000 பேர் அதிபர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அதிபர் மாளிகை எல்சி பேலஸ் என்னும் இடத்துக்கு செல்லும் முன்பே அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்டக்காரர்களில் சிலர் மாக்ரோன் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மாக்ரோன் ஒரு திருடன் எனவும் கொஷங்கள் எழுப்பினர். ஒரு சிலர் தேசிய கீதத்தை கொரஸாக பாடினார்கள்.

காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி ஒரு சிலர் மேற்கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அவ்வாறு செல்ல முயன்ற 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதற்கு போராட்டக்காரர்களிடையே மேலும் எதிர்ப்பு கிளம்பவே கலவரம் மூளும் சூழல் உண்டானது. அதை ஒட்டி காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கும்பலை கலைக்க முயன்றனர். அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கும்பலை கலைத்தனர்.

Sharing is caring!