பிரிட்டனில் இந்திய டாக்டர்கள், என்ஜினியர்களுக்கு குடியுரிமை மறுப்பு

இந்திய டாக்டர்கள், என்ஜினியர்கள் சிலருக்கு காலவரையற்ற குடியுரிமை வழங்க பிரிட்டன் அரசு மறுத்துள்ளது.இது குறித்து அந்நாடு அளித்துள்ள விளக்கத்தில், ‘‘அவர்கள் பொய்யான வருமான விபரங்களை தெரிவித்துள்ளனர். அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் விண்ணப்பம் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.

வருமானம் தொடர்பாக தகவல்கள் தவறுதலாக நடந்தது. இது பெரிய குற்றம் கிடையாது என்று அவர்கள் வாதிட்டனர். இதற்கான நடந்த போராட்டத்தை தொடர்ந்து அவர்களின் விண்ணப்பங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!