பிரிட்டன், ஜெர்மன் நாடுகளுக்கு பறக்கிறார் காங்., தலைவர் ராகுல்…!

புதுடில்லி:
இந்தியர்கள் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேச பிரிட்டன், ஜெர்மன் நாடுகளுக்கு செல்கிறார் காங்., தலைவர் ராகுல்காந்தி.

காங்.தலைவர் ராகுல் வரும் 22-ம் தேதி முதல் பிரிட்டன், ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 22 மற்றும் 23ம் தேதி ஜெர்மன் செல்கிறார். அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் 23 மற்றும் 25 ஆகியே தேதிகளில் பிரிட்டன் சென்று அங்கு வாழும் இந்தியர்களை சந்திக்கிறார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ராகுலின் வெளிநாட்டு பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!