பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 338 பேர் புதிததாக உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரித்தானியாவில் ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை.

வரும் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மற்றும் ஷாப்பிங் கடைகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,042-ஐ எட்டியுள்ளது.

இந்த 338 உயிரிழப்புகளில் 233 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 14 வயதுடை நபர் இறந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து தற்போது வரை நாட்டில் 250,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் 2,600 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் இறந்த நோயாளிகளின் வயது 14 முதல் 98 வயதுக்குட்பட்டவர்கள் என்று என்.எச்.எஸ் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,996 ஆக இருந்தது, தற்போது அது29,236-ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா 36,042-பேருடன் முதல் இடத்திலும், உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 95,021 உயிரிழப்புடன் முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!