பிரித்தானிய இளவரசர் ஹரி (Harry) மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கல் (Meghan Markle) சிட்னி நகரிற்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம்

பிரித்தானிய இளவரசர் ஹரி (Harry) மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கல் (Meghan Markle) ஆகியோர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிற்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் இவர்களது திருமணம் நடந்ததிலிருந்து மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகிறது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் டோங்கா ஆகிய நாடுகளிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன

இளவரசர் தம்பதியை வரவேற்ற நியூ சௌத் வேல்ஸின் கிளேடைஸ் பெரெஜிக்லியான் (Gladys Berejiklian), அவர்களது விஜயம் உற்சாகமூட்டுவதாய் உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!