பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது

அணு ஆலைகளுக்கு எதிராக பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் 53 வீதமான மக்கள் (பாதிக்கும் மேல்..) தற்போது அணு ஆலைகளுக்கு எதிராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அணு ஆலைகள் குறித்து வருடா வருடம் எடுக்கப்பட்டுவரும் கருத்துக்கணிப்பில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐந்து வருடங்களுக்கு முன்னர், பிரெஞ்சு மக்களில் 67 வீதமானவர்கள் அணு ஆலைகளுக்கு ஆதரவு அளித்திருந்தனர். தற்போது 2018 ஆம் ஆண்டில் Odoxa நிறுவம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பில், இது கணிசமாக குறைந்து 47 வீதமானவர்கள் மாத்திரமே ஆதரவு தெரிவிப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில், இந்த முடிவு அரசின் மிகப்பெரும் சாதனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே பெரும் அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது எனவும், சுற்றுச்சூழல் மாசடைவு, புவி வெப்பமடைதல் போன்றவற்றுக்கு அணு ஆலைகள் மிகப்பெரும் காரணிகளாக அமைகின்றது என்பதையும் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!