பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் இராணுவத் தளபதி

பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) இன்று பதவியேற்கவுள்ளார்.

பிரேஸிலில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

இதில், இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பெர்ணான்டோ ஹட்டாட்டை எதிர்கொண்ட 63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ, சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேவேளை, ஊழலை ஒழிப்பதாகவும் நாட்டில் குற்றங்களை இல்லாதொழிப்பதாகவும் பொல்சொனாரோ தமது தேர்தல் பிரசாரங்களில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!