பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளர் ஜேர் பொல்சொனேரோ (Jair Bolsonaro) மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளர் ஜேர் பொல்சொனேரோ (Jair Bolsonaro) மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வலதுசாரி கட்சி வேட்பாளரான ஜேர் பொல்சொனேரோவின் கருத்துக்களுக்கு எதிரான எதிரணி ஆதரவாளர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அதிகம் இரத்தம் வௌியேறியுள்ளதாகவும் ஜேர் பொல்சொனேரோவின் மகன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 2013 ஆம் ஆண்டிலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!