பிரேஸில் புதிய ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலின் 95 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 55 வீதமான வாக்குகளைப் பெற்று பொல்சொனொரோ ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

பொல்சொனோரோவை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பெர்னாண்டோ ஹடட் 45 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளார்.

ஜெய்ர் பிரேஸில் இராணுவத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியிருந்தார்.

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவதும் இறுதியுமான சுற்று வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஊழல் மோசடிகளும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்திருந்த தேர்தலாக இந்தத் தேர்தல் அந்நாட்டு அரசியல் வரலாற்றில் பதிவாகியிருந்தது.

ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜெயர் பொல்சானரோ, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிடவிருந்த அப்போதைய ஜனாதிபதி லூயிஸ் இன்னாசியோ லூலா டா சில்வாவிற்கு ஊழல் குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்குப் பதிலாக சாவோ போலோவின் முன்னாள் மேயரும் கல்வி அமைச்சருமான பெர்னாண்டோ ஹடட் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!