பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர்… ஸ்டாலின் சொல்றார்

சென்னை:
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டில்லி சென்றிருந்த அவர் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

எழுத்துரிமை, பேச்சுரிமை போன்ற சுதந்திரங்கள் மத்தியில் ஆளும் அரசால் பறிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத அரசாக மத்திய அரசு உள்ளது.

நாட்டில் நடப்பது பா.ஜ. ஆட்சி அல்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் இரண்டு ரிசர்வ் வங்கி ஆளுனர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மேகதாது பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவாக காங். மூத்த தலைவர் சோனியா உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!