பிலிப்பைன்ஸில் மேயர் சுட்டுக் கொலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடத்தல் ஆசாமிகளை கண்டவுடன் சுட்டுத் தள்ளவும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் தள்ளவும் அதிபர் ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.இதனால் உயிருக்கு சுமார் 7.5 லட்சம் பேர் சரணடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என 3 ஆயிரம் பேர் தேடப்பட்டு வருகின்றனர். மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக செயல்பட்ட பட்டாங்காஸ் மாகாண டனுவான் நகர மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்திய போது மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் போதை கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்த போது அவர்களை தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!