பிளையிங் கிளப் தொடக்கம்… ரகசிய பிரஸ் மீட் வைத்த விமான நிலையம்

திருச்சி:
சர்ச்சைகள் பற்றி கேள்வி கேட்காமல் இருக்க  வேண்டும் என்பதற்காக பிளையிங் கிளப் பற்றி திருச்சி விமான நிலைய நிர்வாகம் ரகசிய பிரஸ்மீட் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக திருச்சி விமானநிலையம் சர்ச்சயைில் சிக்கி வருகிறது. காம்பவுண்ட் மீது விமானம் மோதியது, நேருக்குநேர் விமானங்கள் சென்ற விவகாரம் என டில்லி அதிகாரிகளின் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் விட சமீபத்தில் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் தன்னை மர்மநபர் பின்தொடர்ந்தாக கூறி சிசிடிகேமிரா பதிவுகளை வாங்கிய விவகாரம் பூதாகரமாகியு்ள்ளது.

இப்படியாக பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியாக்களின் கழுகு பார்வையில் உள்ள திருச்சி விமான நிலையம் நேற்று ரகசிய பிரஸ் மீட் ஒன்றை நடத்தி மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

திருச்சியில் கடந்தசில ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட விமானபயிற்சி அமைப்பு முழுமையாக இயங்கவில்லை. இந்த நிலையில் சென்னை பிளையிங் கிளப் மீண்டும் திருச்சியில் பைலட் பயிற்சியை துவக்குகிறது.

இது தொடர்பாக பிரஸ் மீட் ஒன்றை திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன் நடத்தினார். இதற்கு முக்கிய பத்திரிக்கைகள் மற்றும் மீடியாக்களுக்கு அழைக்கப்படவில்லை. காரணம் திருச்சி விமானநிலையத்தில் பல்வேறு பிரச்சனை உள்ளது. சமீபத்திய அமைச்சர் வெல்லமண்டி விவகாரம் உள்ளிட்டவை குறித்து சர்ச்சை கேள்விகள் எழுப்பப்படும்.

கேள்வி கேட்காமல் சொன்னதை போடும் பத்திரிக்கையாளர்கள் போதும் என்று அதிகாரிகள் முடிவு விட்டது தான் இதற்கு காரணம் என்கின்றனர் விமானநிலைய ஊழியர்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!