பி.எப். பணம் பெறும் வழி எளிமை… எளிமை…! டுவிட்டரில் தகவல்

புதுடில்லி:
பி.எப். பணம் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இபிஎப்ஓ (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர், 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎப் பணத்தை பெற முடியும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிஎப் பணம் பெறுபவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பிஎப் தொகையில் 75 சதவீதத்தை பெற முடியும். மீதமுள்ள 25 சதவீதம் தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும்.

இபிஎப் இந்தியா கூட்டத்திற்கு பிறகு, டுவிட்டரில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 75 சதவீதம் பிஎப் பணத்தை பெற்ற பிறகு ஒருவருக்கு வேலை கிடைத்து விட்டால், வேறு வேலைக்கு சென்ற பிறகு அந்த பிஎப் கணக்கை தொடரவும் வழி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!