புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்பு

புதுடில்லி:
தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஓம் பிரகாஷ் ராவத் ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த பதவிக்கு தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்று கொண்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்ற உள்ளார். அவரது தலைமையில் 2019 லோக்சபா தேர்தல், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, மஹாராஷ்டிரா, அரியானா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.

இவர், ஏற்கனவே செய்தி ஒலிபரப்பு துறை செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!