புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம்… கைதானார் மின்வாரிய உதவி பொறியாளர்

ராஜபாளையம்:
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி மாடன். இவரது மகன் ராம்குமார் (27). கூலி தொழிலாளி. அதே பகுதியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பிற்காக தளவாய்புரம் ஊரக மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் ராஜபாளையத்தை சேர்ந்த பால் பாண்டியை தொடர்பு கொண்டார்.

புதிய இணைப்பு வழங்க அவர் ரூ.3000 கேட்டுள்ளார். பணம் தந்த பிறகும் இணைப்பு வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு மேலும் ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும் பணம் கொடுக்க விரும்பாத ராம்குமார் இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

இதன் பேரில் நேற்று ரசாயனம் தடவிய நோட்டுகளை உதவி பொறியாளர் பால்பாண்டியிடம் வழங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா ஆகியோர் கொண்ட குழுவினர் பால்பாண்டியை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!