புதிய முடிவை எடுத்த ஆப்பிள் நிறுவனம்…!

நியூயார்க்:
புதிய முடிவு எடுத்துள்ளது… எடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் சீனாவில் ஐபோன்களுக்கு தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடையை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதாவது, சீனாவில் ஐபோன்களின் விற்பனைக்கு குவால்காம் நிறுவனம் தடைக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சீன நீதிமன்றம் ஐபோன் விற்பனைக்கு தடை விதித்தது.

எனவே, இந்த தடையை தவிர்க்க சீனாவில் உள்ள ஐபோன்களுக்கு அப்டேட் வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!