புதிய மெகா கூட்டணிக்கு அச்சாரம்… ஸ்டாலின் டில்லி பயணம்?

சென்னை:
புதிய கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமோ என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக வலுவாக இருக்கும் பாஜவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வேலையில் சில தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 9ம் தேதி டில்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பாஜவை வீழ்த்த வியூகம் அமைக்கவுள்ளனர். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டில்லி செல்லவுள்ளதாக திமுக தரப்ப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்பட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால் டிசம்பர் 9ம் தேதி மெகா கூட்டணிக்கு புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!