புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் வருது… ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடில்லி:
வருது… வருது… புதிய ரூ.100 நோட்டுக்கள் விரைவில் வருது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

66 மில்லிமீட்டர் அகலம், 142 மில்லிமீட்டர் நீளத்தில் அமைந்த புதிய 100 ரூபாய் நோட்டு, அடிப்படையில் லாவண்டர் நிறத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்துடன் இருக்கும். முன்புறம் மகாத்மா காந்தியின் படமும், பின்புறத்தில், குஜராத் மாநிலத்தின் பதான் நகரில் அமைந்துள்ள, உலக பாரம்பரிய சின்னங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராணியின் படிக்கிணறு படமும் இடம்பெற்றிருக்கும்.

ரூபாய் நோட்டை பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்து அறிவதற்கான சிறப்பம்சங்கள், பின்புறம் இடதுபக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு உட்பட அம்சங்கள் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெறும். ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடியாகும். இத்தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!