புதுக்கோட்டை சிறையில் அதிரடி சோதனை

புதுக்கோட்டை:
சென்னை புழல் சிறையில் கைதிகள் டி.வி. உட்பட பல வசதிகளுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் புதுக்கோட்டை மத்திய சிறையில் இன்று டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதிகள் போதை பொருட்கள், செல்போன்கள், மற்றும் ஆயுதங்கள் வைத்துள்ளனரா என ஆய்வு செய்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!