புதுசு கண்ணா… புதுசு… படுக்கை வசதி கொண்ட பஸ் சோதனை ஓட்டம்

கரூர்:
புதுசு கண்ணா… புதுசு… இது கரூர் மக்களுக்கான சொகுசு பஸ் என்று
சோதனை ஓட்டம் நடந்துள்ளது.

கரூரில் கரூர்- கோவை இடையே குறைந்த தூர பஸ்களில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்சின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குளிர்சாதனம், இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய பஸ் கரூரில் இருந்து கோவைக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. கரூர்-கோவை இடையே இயக்கப்படும் விரைவு பஸ் முக்கிய மருத்துவமனை, கல்லூரிகளில் நின்று செல்லும் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!