புதுச்சேரியில் ஓய்வுபெற்ற போலீசார் தினம்

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஓய்வுபெற்ற போலீசார் தினம் கொண்டாடப்பட்டது.

போலீஸ் துறையில் பணி ஓய்வு பெற்ற எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் சார்பில் ஓய்வுபெற்ற போலீசார் தினம் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடந்த விழாவிற்கு ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற எஸ்.பி.,க்கள் ராமசாமி, சண்முகசுந்தரம், வெங்கடாசலம், சுப்ரமணியன், மோகன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கரதாஸ் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் கணேசன், சந்திரசேகரன், தெய்வநாயகம், பாஸ்கரதாஸ், கலையரசு, ஞானபிரகாசம், குருமூர்த்தி மற்றும் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர்கள் பேசினர்.

விழாவில் டாக்டர் பக்தவச்சலம் மனநலம் குறித்தும், ஜிப்மர் மருத்துவமனையின் கண், காது, மூக்கு சிகிச்சை டாக்டர்
துர்காதேவி முதியோர்களுக்கான காது கேளாமைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேசினர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!