புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்… படகு துறையில் கியூ

புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.

விடுமுறை தினமான நேற்று புதுச்சேரி படகு குழாமில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா நகரமான புதுச்சேரியில், பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையாலும், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமான நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மேலும், புதுச்சேரி கடற்கரை பகுதியில், சுற்றுலா பயணிகளை அதிக அளவில் காண முடிந்தது.

இதனால், கடற்கரையையொட்டிய ஒயிட் டவுன் பகுதிகள், செயின்ட் லுாயி சாலை, மரைன் வீதி, பிரான்சுவா மர்தேன் வீதி, துப்புய் வீதி, நேரு வீதி என, அனைத்து சாலைகளிலும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!