புத்தாண்டு கொண்டாட்டம்… ஆடம்பர ஓட்டல்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு
ராஜஸ்தான்:
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ராஜஸ்தானில் ஆடம்பர ஓட்டல்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஏராளமான ஆடம்பர ஓட்டல்கள் உள்ளன. புத்தாண்டையொட்டி ராஜஸ்தானில் உள்ள ஆடம்பர விடுதிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஜோத்பூரில் உள்ள உமைத் பவன், உதய்பூரில் உள்ள தாஜ் லேக் பேலஸ் போன்ற விடுதிகளில் 11 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆடம்பர விரும்பிகள் பணத்தை ஒரு பொருட்டாக கருதாமல் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ராம்பாக் அரண்மனை விடுதி வரிகள் நீங்கலாக ஒரு நாள் இரவு தங்க மட்டும் 8.5 லட்சம் ரூபாய் வசூலிக்கிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த கட்டணம் 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டையொட்டி இங்கு கட்டணம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S