புத்தாண்டு தினத்தில் தலைமை செயலகம் வந்த முதல்வர் மனோகர் பரீக்கர்
பனாஜி:
புத்தாண்டு தினத்தில் தலைமை செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் கோவா முதல்வர்.
கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் உடல்நலக்குறைவால், வீட்டில் இருந்தபடியே, அலுவல்களை கவனித்து வருகிறார். அவ்வபோது, அமைச்சர்கள், அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை செய்தார். சில நாட்களுக்கு முன் வெளியே வந்து அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நேற்று புத்தாண்டு தினத்தில் முதல்வர் பரீக்கர் தலைமை செயலகம் வந்தார். அவரை பா.ஜ.,வினர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S