புத்தாண்டை ஆடி, பாடி உற்சாகமாக வரவேற்ற மக்கள்

புதுடில்லி:
புத்தாண்டை உற்சாகமாக ஆடி, பாடி வரவேற்றுள்ளனர் மக்கள்.

2019-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் புத்தாண்டை ஆடி,பாடி வரவேற்று கொண்டாடினர்.

இந்தியாவில் புதுடில்லியில் இந்தியா கேட் பகுதியில் இப்போத பொதுமக்கள் குவிய துவங்கியுளளனர். கடும் குளிர் நிலவிய போதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தியா கேட்டில் குவிந்துள்ளனர். இதற்காக இந்தியா கேட் மின் விளக்கில் ஜொலித்தது.

இதே போன்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் பொதுமக்கள் தங்கள் குவிந்துள்ளனர். மேலம் இசைக்கலைஞர்கள் பலர் ஆடிப்பாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்துள்ளனர். மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!