புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மக்கள்

வெலிங்டன்:
புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மக்கள்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

2019-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 2019-புத்தாண்டு இன்று உலகில் முதன்முதலாக நியூசிலாந்தில் பிறந்தது.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை, கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

இதேபோல் ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. சிட்னி துறைமுகம் அருகே கண்ணை கவரும் வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சிகளுடன் சிட்னிவாசிகள் ஒன்று கூடி புத்தாண்டை ஆடிப்பாடி வரவேற்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!