புனே தொகுதியில் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க பாஜ முடிவு

மும்பை:
புனே லோக்சபா தொகுதியில் நடிகை மாதுரி தீட்சித்தை வேட்பாளராக களம் இறக்க பாஜ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிர மாநிலத்தின், புனே லோக்சபா தொகுதியில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க, பா.ஜ., முடிவு செய்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

புனே லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, அனில் ஷிரோல் உள்ளார். இதுகுறித்து, மஹாராஷ்டிர மாநில, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

மும்பையில், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை, பா.ஜ., தலைவர் அமித் ஷா, சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்திய, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அவரிடம், பா.ஜ.,வுக்கு ஆதரவு கோரினார்.

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி தற்போது, முழு வீச்சில் நடக்கிறது. இந்த பட்டியலில், புனே லோக்சபா தொகுதி யில் போட்டியிட, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த தொகுதியில், அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!