புயலாக மாறியது… 17ம் தேதி கரையை கடக்கிறது… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை:
புயலாக மாறி உள்ளது…மாறி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு ‘பெய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை 17 ம் தேதி ஆந்திராவில் காக்கிநாடாவுக்கும் – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்க உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி. மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயல் ஆந்திர மாநிலம், ஓங்கோல் காக்கி நாடா இடையே நாளை 17ம் தேதி மதியம் கரையை கடக்கும். இதன் காரணமாக வரும் இன்று 16ம் தேதி வட தமிழக கடலோரா பகுதிகுகளில் மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும்.

மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் தரைக்காற்று வீசும் . வரும் 15,16, 17 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!