புயலுடன் கூடிய மழையில் சிக்கி, 11 பேர் உயிரிழந்துள்ளனர்

இத்தாலியைத் தாக்கிய புயலுடன் கூடிய மழையில் சிக்கி, 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாலியின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களை இந்தப் புயல் தாக்கியுள்ளதுடன், மணித்தியாலத்துக்கு 180 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசுவதாகவும் கூறப்படுகின்றது.

புயலினால் கரையோரப் பிரதேசங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இத்தாலியின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களிலுள்ள பாடசாலைகள், சுற்றுலாத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.

அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக வெனிஸ் நகரத்தின் கால்வாயில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீதிகள், குடியிருப்புக்கள் உட்பட நகரின் 75 வீதமான பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெனிஸ் நகரின் மத்தியிலுள்ள சென். மார்க் சதுக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்து 156 சென்ரிமீற்றராக பதிவாகியுள்ளதுடன், அங்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நான்காவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

புயல் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sharing is caring!