புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட வலியுறுத்தல்

சென்னை:
கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட வேண்டும் என்று கமல் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கூறியதாவது:

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் புயல் பாதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி பாதிப்பு உள்ளது. சிமென்ட்டில் அமைக்கப்பட்ட மின்கம்பம் கூட சேதமடைந்துள்ளது.

சிமென்ட்டில் கூட குறை இருந்திருக்கலாம். மனிதாபிமானம் கருதி பிரதமர் இங்கு வந்து பார்வையிட்டால் அரசு சக்கரம் வேகமாக சுழலும். முதல்வரின் ஹெலிகாப்டர் பார்வை என்பது தூரத்து பார்வையாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!