“புயல் பாதிப்புகளை பார்க்க பிரதமர் நிச்சயம் தமிழகம் வருவார்”
சென்னை:
புயல் பாதிப்புகளை பார்க்க பிரதமர் நிச்சயம் தமிழகம் வருவார் என்று பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
புயல் பாதித்த பகுதிகளில் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது செயற்கை மழையை வைத்து தாமரையை மலர செய்வோம். மழை வந்துவிட்டது, குளங்கள் நிரம்பி தாமரை மலர துவங்கியுள்ளன.
திமுகவின் எதிர்மறை அரசியல் வெற்றி பெறாது. பிரதமரின் பிரதிநிதிகள் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். புயல் பாதிப்பை ஆய்வு செய்ய நிச்சயம் பிரதமர் தமிழகம் வருவார். மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளை ஏன் பார்க்க மறுக்கின்றனர்.
மீத்தேன் திட்டத்தில் ஆய்விற்காக மட்டுமே கையெழுத்து போட்டதாக ஸ்டாலின் கூறினார். அதுபோல், மேகதாது திட்டத்திற்கு ஆய்விற்காக மட்டுமே மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதாக ஒப்பு கொண்டால், மேகதாது திட்டம் குறித்து தான் கருத்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி