புறக்கணித்தது… இந்தியா ஓட்டு அளிக்காமல் புறக்கணித்தது

நியூயார்க்:
புறக்கணித்தது… இந்தியா ஓட்டு அளிக்காமல் புறக்கணித்து உள்ளது. எதற்காக தெரியுங்களா?

ஹமாஸ் அமைப்பினரை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேல், பாலஸ்தீன எல்லையில் காஸா பகுதியில் ஹமாஸ் படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படையுடன் பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.நா. சபையில் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளை கண்டித்து அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது ஒட்டெடுப்பு நடந்தது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 87 நாடுகளும் வாக்களித்தன. எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து புறக்கணி்த்தன. போதிய ஆதரவு இல்லாமல் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

முன்னதாக ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக 500 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக ஒரு தீர்மானம்கூட கொண்டு வரப்படவில்லை என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!