பூடான் பிரதமர் – காங்., தலைவர் ராகுல் சந்திப்பு`

புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் – பூடான் பிரதமர் ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர்.

இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் லோடே ஷெரீங்கை, காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஓட்டல் ஒன்றில் நடந்தது. இருநாட்டு அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து டுவிட்டரில் ராகுல் தெரிவித்துள்ளதாவது:

பூடான் பிரதமர் லோடே ஷெரிங்குடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. பிராந்திய அரசியல் நிலவரம் மற்றும் பொது நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். பேச்சுவார்த்தையை எதிர்காலத்திலும் தொடர ஆர்வமாக உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 27 ம் தேதி டில்லி வந்த பூடான் பிரதமர், 28ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!