பூட்டிய காருக்குள் சிக்கித் தவித்த குழந்தை மீட்பு

மீரட்:
பூட்டிய காருக்குள் சிக்கித் தவித்த குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

உ.பி.யில் பூட்டிய காருக்குள் சிக்கி தவித்த ஒரு வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. உபி. மாநிலம் மீரட் நகரில் ஜே.என்.என். சந்தையில் பொருள்கள் வாங்க தம்பதியினர் காரில் வந்தனர்.

உடன் வந்த ஒரு வயது குழந்தையை காருக்குள் தூங்கி கொண்டிருந்ததால் காரிலேயே விட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டதால் அழுது தவித்தது. குழந்தை தவிப்பதை கண்ணாடி வழியாக பார்த்த பொதுமக்கள், கார் கதவை உடைத்து குழந்தையை மீட்டனர்.

சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த போலீசார் கவனக்குறைவாக நடந்து கொண்ட தம்பதியினரை எச்சரித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!