பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் ஆர்ப்பாட்டம்

சென்னை:
இன்று முதல் தொடங்கி உள்ளது லாரிகள் ஸ்டிரைக் இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று முதல் துவங்கியது.

டீசல், சுங்க கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் ஆகியவற்றின் உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்று முதல் லாரிகள் ‘ஸ்டிரைக்’ துவங்கியது. தமிழகத்தில், 4.50 லட்சம் உட்பட நாடு முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லாரிகள் ஸ்டிரைக்கால் தினமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரம் பாதிக்கும். காய்கறி, பால், உணவு தானியங்கள், எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!