பெட்ரோல் விலையில் ரூ.2.50 குறைப்பு… மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை

சென்னை:
மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.50 குறைத்துள்ளது. பொது துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும் ரூ.1 குறைத்துள்ளதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்துள்ளது.

மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலை குறைப்பு அறவிப்பை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84..70 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.11காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.50 குறைத்துள்ளது. பொது துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும் ரூ.1 குறைத்துள்ளதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 2.63 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.84..70காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 2.68காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.11 காசுகளாகவும், உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!