பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்., போராட்டம்

புதுடில்லி:
வரும் 10ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்., கட்சி அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83, டீசல் ரூ.75ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து வரும் 10ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்., அறிவித்துள்ளது.

டில்லியில் காங்., மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் காங்., செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அரசுக்கு எதிராக நடைபெறும் இப்போராட்டத்திற்கு எதிர்கட்சிகளும், அரசு சாரா அமைப்பினரும், தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!