பெண்கள் சபரிமலை செல்வதை தடுக்கும் சம்பவம்… 1500 போலீசார் குவிப்பு
திருவனந்தபுரம்:
சபரிமலை, நிலக்கல் பகுதியில் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதை தடுக்கும் சம்பவம் நடப்பதால் இத்தனை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை தடுக்க இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளதால், சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பிறகு, சபரிமலை கோவில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பிறகு 22ம் தேதி நடை அடைக்கப்படும்.
கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ளனர். நிலக்கல் மற்றும் பம்பையில், 800 ஆண் போலீசாரும், 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கல்லில் போலீசார் தடியடி நடத்தி 4 பேரை கைது செய்தனர். சபரிமலை சன்னிதானம் பகுதியில், 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி